Northern Territory இல் Yirrkala பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
களவாடப்பட்ட வாகனமொன்றில் பயணித்த மூவரும், மற்றுமொரு வாகனத்தில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
ஆஸ்திரேலியாவில் சாலைகளில் வீதி விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.