பிரிஸ்பேன் வடக்கில் பகுதியில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், வீடொன்றில் இருந்து இரு சடலங்களை மீட்டனர்.
இது சந்தேகத்துக்கிடமான மரணமாக கருதப்படுகின்றது. பலகோணங்களில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.