அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட பிறகும், சிறார்கள் உள்ளட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை நவுரு தீவில் தடுத்து வைத்ததன்மூலம் மனித உரிமைகள் சாசனத்தை ஆஸ்திரேலியா மீறியுள்ளதாக ஐ.நா. குழு கண்டறிந்துள்ளது.
ஐ.நாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் பெரடல் அரசின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேற்றவாசிகள் 2013 ஆம் ஆண்டு முதல் நவுருவில் தடுத்து வைக்கப்பட்டுவருகின்றனர்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு இழப்பீடு வழங்கவும், இதுபோன்ற மீறல்கள் மீண்டு நிகழலாமை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஐநா குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
இலங்கை, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24
புகலிடக்கோரிக்கையாளர்களால் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மனு தொடர்பில் விசாரணை நடத்தி வந்த ஐநா குழுவே மேற்படி பரிந்துரையை முன்வைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ள இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் இருந்து 2014 ஆம் ஆண்டு நவுருவுக்கு மாற்றப்பட்டனர்.