பேர்த் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
காரும், டாக்ஸியும் மோதுண்டதில் ஏற்பட்ட விபத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரு வாகனங்களின் சாரதிகளும், டாக்ஸியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.