அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவருக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திப்பதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக பெனி வோங் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து பெருமிதம் அடைவதாகவும், இது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான பலமான கூட்டணி உறவின் வெளிப்பாடாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.