தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அரசியல் அடக்குமுறை முடிவுக்கு வரவேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளது.
வெனிசுலா ஜனாதிபதியாக நிகோலஸ் மதுரோ மீண்டும் பதவியேற்றுள்ள நிலையிலேயே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவில் ஜனநாயகக் கொள்கைகள் மதிக்கப்பட வேண்டும், கருத்து சுதந்திரம் மற்றும் போராடும் சுதந்திரம் என்பனவும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்துள்ளார்.