ஆஸ்திரேலியா தனது நாட்டு தூதரகத்தை உக்ரைனில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிழல் வெளிவிவகார அமைச்சர் Simon Birmingham வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் உக்ரைன் தலைநகரில் இருந்த தூதரகங்கள் போலந்து நாட்டுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் தற்போது 70 இற்கு மேற்பட்ட நாடுகள் உக்ரைனில் தூதரக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த வழிமுறையை ஆஸ்திரேலியா பின்பற்ற வேண்டும் எனவும் Simon Birmingham இடித்துரைத்துள்ளார். இதற்காக தமது கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள Simon Birmingham முக்கிய சந்திப்புகளில் ஈடபட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.