இந்தோனேசிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா திரும்பிய பாலி 9 கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான மேத்யூ நார்மன் என்பவரே, வேவர்லி பொலிஸ் நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2005 மார்ச் 16 ஆம் திகதி இடம்பெற்ற கார் கடத்தல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலி - 9 கும்பலைச் சேர்ந்தவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியாவில் சிறை தண்டனையை எதிர்கொண்டனர்.
இராஜதந்திர முயற்சியால் அவர்களுக்கு கடந்த மாதம் விடுதலை கிடைத்தது. ஆஸ்திரேலியா வந்து அவர்களின் குடும்பத்துடன் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.