மெல்பேர்ண் மேற்கிலுள்ள வீடொன்றுக்குள் 27 வயது யுவதியொருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
இரு ஆண்களே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகன்றது.
குறித்த பெண்ணின் சகோதரர் வெளிநாடு சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இரு ஆண்கள் காரில் இருந்து இறங்குவது தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இவர்களே வீட்டுக்குள் திரவத்தை ஊற்றி தீ மூட்டியுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுகின்றது. எனினும், தவறானதொரு முகவரி குறிவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.