மெல்பேர்ண் தென்கிழக்கிலுள்ள கிளைட் நார்தில் நேற்றிரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய பிறகே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 மற்றும் 54 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 20 பேர்வரை பங்கேற்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், விசாரணை வேட்டையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.