லிபரல் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் Rory Amon , பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்முறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறார்களிடம் அவர் பாலியல் உறவு வைத்திருந்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Rory Amon இற்கு எதிரான முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தவதற்காக 2023 மார்ச்சில் தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விரிவான விசாரணைகளின் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான Rory Amon , ஒரு சட்டத்தரணியாவார். கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, நிபந்தனை அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.