பிரிஸ்பேனில் பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு இலக்காகியுள்ள சம்பவம் தொடர்பில் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான பெண், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பிரிஸ்பேனின் தென்கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்கு இன்று காலை அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
இதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், தீக்காயங்களுக்கு உள்ளான 30 வயது பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றனர்.
இதனையடுத்து 36 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.