ஹோபார்ட்டின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தையொன்று பலியாகியுள்ளது. மேலும் இருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று முற்பகல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டாலும், அவர்கள் வருவதற்கு முன்னர் வீடு தீக்கிரையாகியுள்ளது.
அத்துடன், மேலும் மூன்று குழந்தைகளும் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.