போதைப்பொருள் பயன்படுத்திய இருவர் பலி: சுகாதார எச்சரிக்கை விடுப்பு
கன்பராவில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய இருவர் பலியாகியுள்ளனர்.
24 மணிநேரத்துக்குள் இவ்வாறு இரு மரணங்கள் பதிவாகியுள்ளதால், பொலிஸார் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அளவுக்கதிகமான போதைப்பொருள் பயன்பாட்டால் நேற்று காலை பெண்ணொருவரும், மாலை மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய போதைப்பொருள் தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.