15 மாதகால போருக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.
சிட்னி மற்றும் மெல்பேர்ண் நகரங்களில் அணிதிரண்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசாவில் நீடித்த அமைதி நிலவ வேண்டும், பாலஸ்தீன விடுதலை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இஸ்ரேல், ஹமாஸ் போர் விவகாரம் ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்தது. யூத விரோத சம்பவங்கள் அதிகரித்ததுடன், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், அதிலுள்ள விதிமுறைகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.