இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ{ம், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.
முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்பாக்கி தாக்குதல்கள் இல்லாமல் காசா மக்கள் கழித்தனர். குறிப்பாக மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 டிரக்குகள் காசாவுக்குள் சென்றன. இவற்றில் 300 டிரக்குகள் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு காசாவுக்குள் சென்றன.
அதேவேளை, கடந்துள்ள மூன்று மாதங்களில் மாத்திரம் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாட்டவர்களுக்கு சுமார் ஆயிரம் வரையில் தற்காலிக மனிதாபிமான விசாக்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரிவரையான காலப்பகுதியிலேயே குறித்த விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு சமூக சலுகைகள் மற்றும் தொழில் உரிமை கிடைக்கப்பெறும். எனினும், நிரந்தர விசாவை பெறுவதற்குரிய கட்டுப்பாடுகள் உள்ளன.