விமான பயணத்தின்போது அதிகளவு மது அருந்திவிட்டு குழப்பத்தில் ஈடுபட்ட கெய்ர்ன்ஸ் பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான குறித்த நபரை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சக பயணியை தொட்டமை, விமான கழிவறையில் அநாகரீகமாக நடந்துகொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர் குழப்பத்தில் ஈடுபட்டதால் பிரிஸ்பேனில் இருந்து பேர்த் நோக்கி சென்ற விமானம், மீண்டும் பிரிஸ்பேனில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமான சேவை இரு மணிநேரம் தாமதமானது.