கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிபெற்றால் பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு நெடுநாள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிழல் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேட்டர்சன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
யூத விரோத சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அத்துடன், யூதர்கள் குறிவைக்கப்படுவதும், அவர்களின் சொத்துகள் குறிவைக்கப்படுவதும் கண்டிக்கத்தக்க செயல் எனவும் நிழல் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னியிலுள்ள யூத ஜெப ஆலயத்துக்கு முன்பாக உரையாற்றிய ஜேம்ஸ் பேட்டர்சன்ஸ், யூத எதிர்ப்பு அலையை எதிர்த்து போராட காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் எனவும், இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக தேசிய அமைச்சரவைக் கூட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.