ஆஸ்திரேலிய ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் புதிய வெளிவிவகார செயலாளருடன் நாளை பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றுள்ள பெனி வோங், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனும் பெனி வோங் சந்திப்பு நடத்தவுள்ளார்.
மேற்படி சந்திப்புகளின்போது அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவின் யதார்த்தம் பற்றி எடுத்துரைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஏற்றுமதியென்பது அமெரிக்காவுக்கு சிறந்த பொருளாதார உறவாகும் எனவும் பெனி வோங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.