பிரிஸ்பேனில், சூடான தேநீர் ஊற்றப்பட்டு காயப்படுத்தப்பட்ட 9 மாத ஆண்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், குழந்தைமீது இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.தனது குடும்பத்தாருடன் குறிந்த குழந்தை பூங்காவில் இருந்துள்ளது.
அவ்வேளை குழந்தைக்கு அருகில் வந்த நபரொருவர், குழந்தைமீது சூடான தேநீரை ஊற்றி தாக்கிவிட்டு, தப்பியோடியுள்ளார்.இதனால் காயமடைந்த குழந்தை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் படங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. பொலிஸாரின் தேடுதல் வேட்டை தொடரும், நிலையில் பொது மக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.