இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை ஆஸ்திரேலியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சிட்னி மற்றும் மெல்பேர்ணில் வாராந்தம் போராடிவரும் ஏற்பாட்டாளர்களே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
அத்துடன், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் சிறந்த முன்னேற்பாடு என்று ஆஸ்திரேலிய பாலஸ்தீன நடவடிக்கை குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவே ஐநாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தீர்மானங்களை ஆஸ்திரேலியா ஆதரித்தது எனவும் மேற்படி குழு குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன்மீது தாக்குதல் தாக்குதல் நடத்தும் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இராஜதந்திர உறவு துண்டிக்கப்பட்டது. அதேபோன்றதொரு அணுகுமுறையே பாலஸ்தீன விவகாரத்திலும் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.