துருக்கிய போலுவில் உள்ள மரத்தாலான 12 மாடி கிராண்ட் கர்தால் ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:27 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டு 51க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான இடத்திற்கு குதிக்க முயன்றதில் இரண்டு பேர் இறந்தனர்.
தீயை அணைக்க 12 மணி நேரம் ஆனது. உரிமையாளர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் கூறுகிறார். 76 பேரின் அடையாளங்கள் இன்னும்
காயமடைந்த 51 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் கெமல் மெமிசோக்லு கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் போலு ஆளுநர் அப்துல்அஜிஸ் அய்டின் கூறுகையில், ஹோட்டலின் நான்காவது மாடியின் உணவகப் பிரிவில் அது வெடித்து மேலே உள்ள தளங்களுக்கு பரவியதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உறைபனி வானிலை காரணமாக, தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. அவசர சேவைகள் பிரிவி 267 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து விசாரிக்க வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சர் யில்மாஸ் துன்ச் தெரிவித்தார்.
ஜனாதிபதி தையிப் எர்டோகன் புதன்கிழமை தேசிய துக்க நாளாக அறிவித்தார், மேலும் சோகத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.
சபா.தயாபரன்