பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தைக் கைவிடுமாறு விக்டோரிய மாநில ஆளுங்கட்சியும், எதிரணியும் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும், மெல்பேர்ணில் வாராந்தம் நடத்தப்படும் போராட்டம் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
காசாமீது இஸ்ரேல் போர் தொடுத்ததில் இருந்து, பாலஸ்தீன மக்களுக்காக மெல்பேர்ணில் வாராந்தம் போராட்டம் நடைபெற்றுவந்தது.
காசாவில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், வாராந்த போராட்டத்தைக் கைவிடுமாறு விக்டோரிய மாநில பிரீமியர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை எதிரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே போராட்டம் தொடரும் என பாலஸ்தீன ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
பாலஸ்தீன விவகாரத்தில் ஆஸ்திரேலியா இன்னும் கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே போராட்டம் தொடரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.