மெல்பேர்ண், கோலிங்வுட்டில் இளைஞர்கள் குழுமீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
15 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர் எனவும், அவர்கள் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலையடுத்தே அதிகாலை ஒரு மணியளவில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளதுடன், ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், கைது செய்வதற்குரிய தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.