ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி போராடிவந்த மற்றுமொரு ஈழ அகதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்பேர்ண் கிழக்கு பகுதியில் வசித்துவந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சசீகரன் செல்வநாகம் என்பவரே மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற சசீகரன் தனக்கு நிரந்தர விசா வழங்குமாறு கோரி வந்தார். அதேபோல ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு விசா வழங்குமாறு வலியுறுத்தும் போராட்டங்களிலும் பங்கேற்றுவந்தார்.
ஒரு தசாப்தம் கடந்தும் தனக்கு விசா கிடைக்காததாலும், குடும்பத்தை பிரிந்து வாழ்வதாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த நிலையிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது.
விசா கிடைக்காத மன விரக்தியில் 23 வயதான ஈழத்து இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் மற்றுமொரு புகலிடக்கோரிக்கையாளர்களின் மரணமும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.