நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் களவாடப்பட்ட காரொன்று விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடொன்றில் இன்று அதிகாலை வாகனமொன்று திருடப்பட்டுள்ளது என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று காலை வாகனமொன்றை நிறுத்துவதற்கு பொலிஸார் முற்பட்டனர்.
பொலிஸாரின் கட்டளையை ஏற்காது வாகனம் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதனை பின்தொடர்ந்து பொலிஸார் சென்றனர்.
வேகமாக சென்ற களவாடப்பட்ட வாகனம், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
14 வயதுடைய சிறார்கள் தப்பிச்சென்றனர், ட்ரோன் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.