சிறார் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பில் பெடரல் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏஐ பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீங்குகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளுடன் கலந்துரையாடி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நேர்த்தியான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் சிறார்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் பெரல் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சிறார்களை இலக்குவைத்த இணையவழி குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.