பாதாள குழு உறுப்பினரான சாம் அப்துல்ரஹிம் தனது காதலியுடன் பயணித்துக்கொண்டிருக்கையில் இன்று முற்பகல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமது காரில் ஏறுவதற்காக இருவரும் நடந்துசென்றவேளையே இலக்கு வைக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் வடகிழக்கு பகுதியிலேயே இன்று முற்பகல்வேளையில் இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழுவொன்று பதுங்கி இருந்தே அவர்மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
காதலி காயம் எதுவுமின்றி உயிர்பிழைத்துள்ளார். தனது காதலனுக்கு அவர் முதலுதவி அளிக்க முற்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.