சிட்னி தெற்கு பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவரை குத்திக்கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயது பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலுதளி அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இளைஞனின் வயிற்று பகுதியிலேயே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், இன்று காலை 35 வயது பெண்ணொருவரை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.