சிட்னியில் பெருமளவு வெடிபொருட்கள் நிரப்பட்ட கரவன் ரக வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
யூத எதிர்ப்பு தாக்குதலுக்கு இவற்றை பயன்படுத்துவதற்குரிய அறிகுறிகள் இருந்ததாக பொலிஸார் கருதுகின்றனர்.
ஜனவரி 19 ஆம் திகதி கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த கரவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
' இது பெரும் உயிரிழப்பு சம்பவத்துக்கு வழிவகுத்திருக்க வாய்ப்பு இருந்தது." என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், ஆபத்து, அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இதன் பின்புலம் பற்றி பலகோணங்களில் விசாரிக்கப்பட்டுவருகின்றது.
இச்சம்பவத்தை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.