வீதியில் நடந்துசென்றவரை கங்காரு தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தின் மத்திய ஹெலேண்ட்ஸில் பகுதியிலேயே இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50 வயதான குறித்த நபரின் மார்பு மற்றும் கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்று குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த நபருக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.