இஸ்ரேல் - காசா போர் விவகாரம் ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசாவில் இடம்பெற்றுவரும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் லேபர் அரசின் அணுகுமுறை குறித்து முஸ்லிம் சமூகம் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களை அணிதிரட்டும் பிரசாரத்தை எனும் அமைப்பு ஆரம்பித்துள்ளது.
“ சமூகத்தின் கருத்துகளை அரசு செவிமடுக்காததால் முஸ்லிம் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.” என்று அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் Ghaith Krayem தெரிவித்தார்.
“அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் ஓரங்கப்பட்டுவருகின்றது.” எனவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் 20 இற்கு மேற்பட்ட தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைறெவுள்ள நிலையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.