மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு மையத்துக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயதுடைய நபரொருவருக்கே நன்நடத்தை கண்காணிப்புடன் இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யோங்கா ஹில் குடிவரவு தடுப்பு மையத்துக்கே இவர் போதைப்பொருள் கடத்தியுள்ளார். அவரிடமிருந்து கஞ்சா, மெத்தம்பேட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து அவரின் சகாவான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி அப்பெண்ணுக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபருக்கு இன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.