சிட்னி கிழக்கு பகுதியில் நாஜி சின்னத்தை வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டவேளையிலேயே 37 வயதுடைய நபரொருவர் நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
பொலிஸார் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் குறிப்பிட்டுள்ளார்.