கோல்பேஸ் அறகலய காலப்பகுதியில் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு தீவிரமாக செயல்பட்டுள்ளது, எனவே, மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, அரச வதிவிடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
' ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா போன்ற ஜனாதிபதிகளால் முடிக்க முடியாமல்போன போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்தார். எனவேதான:, அவருக்கான பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்." எனவும் எஸ்.பி. திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
' பிரேமதாச, ரஜீவ் காந்தி போன்றவர்களை புலிகளே கொலை செய்தனர். அவ்வமைப்பினர் சர்வதேச மட்டத்தில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்." எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.