இணைய வழி நியோநாஸி வலையமைப்பான டெரர்கிராம்மீது ஆஸ்திரேலியா அரசாங்கம் நிதித் தடைகளை விதித்துள்ளது.
யூத எதிர்ப்பு சம்பவங்களைத் தடுப்பதற்கும், ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே இதற்குரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெரர்கிராம் என்பது வெள்ளை மேலாதிக்கத்தையும், இன ரீதியாக வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு இணையவழி நியோ நாஸி வலையமைப்பாகும்.
புதிய தடையின் பிரகாரம் டெரர்கிராமின் சொத்துகளை பயன்படுத்தல், கையாளுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி அடிப்படையிலான நிறுவனமொன்றின்மீது பயங்கரவாத எதிர்ப்பு நிதி தடைகளை ஆஸ்திரேலியா விதித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய பொதுச்செயலாளர்மீதும் ஆஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.