ஆஸ்திரேலிய உதவித் திட்டத்தின் முன்னாள் முகாமையாளர் மொஹமட் அல் ஹலாபி, இஸ்ரேல் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வேல்ட் விஷன் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆஸ்திரேலியாவின் நிதியுதவி பெற்ற உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் முகாமையாளராக முகமது அல் - ஹலாபி 2016 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பால் கைது செய்யப்பட்டார்.
ஹமாஸ் அமைப்புக்கு நிதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இஸ்ரேல் தரப்பால் முன்வைக்கப்பட்டது.
எனினும், இக்குற்றச்சாட்டை மொஹமட் அல் ஹலாபி மறுத்திருந்தார்.
விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு ஈராக விடுவிக்கப்பட்ட 72 பாலஸ்தீன கைதிகளில் ஒருவராக சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
தன்மீது பொய்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக முகமது அல் ஹலாபி தெரிவித்துள்ளார்.