குயின்ஸ்லாந்து, Gold Coast இல் உள்ள theme சரணாலயத்தில் அனுபவம் வாய்ந்த விலங்கு பராமரிப்பாளர் ஒருவரை புலி தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு புலி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரின் கை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு உயிராபத்து இல்லை எனக் கூறப்படுகின்றது.
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த விலங்கு பராமரிப்பாளர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.