ஆஸ்திரேலியாவுக்கு 20 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்திவந்த நியூசிலாந்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சிட்னி விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த 21 வயது இளைஞன் ஒருவரே இவ்வா றகைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொண்டுவந்த பொருட்களை சோதனைக்குட்படுத்தியபோது கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.