பிரிஸ்பேன் வடக்கிலுள்ள பிரீபி தீவில் சுறா தாக்குதலுக்கு இலக்காகி 17 வயது யுவதியொருவர் பலியாகியுள்ளார்.
நேற்று மாலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீவிலுள்ள கடல்பகுதியில் குறித்த யுவதி நீந்திக்கொண்டிருந்தபோது சுறா தாக்குதலுக்கு இலக்காகி, படுகாயம் அடைந்துள்ளார்.
இவர் உயிர்காக்கும் படைபிரிவில் சேவையாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சூறா தாக்குதலுக்கு இலக்காகி கடந்த மூன்று மாதங்களுக்குள் மூவர் பலியாகியுள்ளனர்.