ஆஸி. தென்கிழக்கு பகுதியில் இயற்கை சீற்றம்: ஒருவர் பலி: பலர் பாதிப்பு
கடும் காற்றுடனான சீரற்ற வானிலையால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Tasmania மற்றும் விக்டோரியா ஆகிய பகுதிகளில் பல குடும்பங்கள் மின் இணைப்பை இழந்து பரிதவித்துவருகின்றன. வியாபார நிலையங்களும் ஸ்தம்பித்துள்ளன.
விக்டோரியாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரும், வில் 38 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
விக்டோரியாவில் சில இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
மரம் முறிந்து விழுந்து பெண்ணொருவர் பலியாகியுள்ள பரிதாபகரமான சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
63 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது கணவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆறுகளில் வெள்ளமும் பெருக்கெடுத்துவருகின்றது. வீதிகள் சிலவும் மூடப்பட்டுள்ளன.