மேற்கு சிட்னியில் கிங்ஸ்வுட்டில் பீட்சா கடை உரிமையாளர் ஒருவர், குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் மார்பு பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்கள் , 58 வயதான குறித்த நபரை வெஸ்ட்மீட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர், எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுவன் மீது பொலிஸார் கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர். செயிண்ட் மேரிஸ் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் மவுண்ட் ட்ரூட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுவனுக்கு பிணை மறுக்கப்பட்ட நிலையில் சிறார்; நீதிமன்றத்தில் அவரை இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
சபா.தயாபரன்