அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிகப்பெரிய சிந்தனையாளர் என புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய எதிர்கட்சித் தலைவரான பீட்டர் டட்டன்.
அவர், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்தீரத்தன்மையை உண்மையாகவே காண விரும்புகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றி, அப்பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே, அதனை வரவேற்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலிய பிரதமர் இது தொடர்பில் கருத்துகூற மறுத்துள்ளார். எனினும், இரு நாடுகள் தீர்வு முன்மொழிவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.