சிட்னி தென்மேற்கு பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் லெப்பிங்டனில் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்து மூவர் தப்பியோடிய நிலையில், அவர்களை பொலிஸார் விரட்டி, மடக்கிப்பிடித்துள்ளனர்.
24, 39 மற்றும் 43 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரொருவர், நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.