விக்டோரியா, மார்னிங்டன் தீபகற்பத்திலுள்ள ஷாப்பிங் சென்டருக்குள், விளையாட்டு துப்பாக்கிகளைக் காண்பித்து மக்களை அச்சுறுத்திய மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஷாப்பிங் சென்டருக்குள், இருந்த விளையாட்டுத் துப்பாக்கிகளைக் களவாடியே அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.