சிட்னி மத்திய பகுதியில் நாஜி கொடியை பறக்கிவிட்டதாகக் கூறப்படும் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டார்லிங்ஹர்ஸ்ட்டிலுள்ள லிவர்பூல் தெருப்பகுதியில் வைத்தே நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 மற்றும் 51 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடியும், அவர்கள் வைத்திருந்த மின்னணு சாதனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.