அமெரிக்காவுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆஸ்திரேலியா செலுத்தியுள்ள நிலையில், AUKUS கூட்டணிக்கு ஆதரவாக டொனால்ட் ட்ரம்ப் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் ஜோ பைடன் ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட AUKUS கூட்டாண்மையின் எதிர்காலம் தொடர்பில் அச்சம் எழுந்திருந்தது.
இந்நிலையிலேயே ட்ரப்ம் நிர்வாகத்தின் முக்கியஸ்தர் ஒருவர், AUKUS குறித்து சாதக நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இரு தரப்பு சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னரே முதல் கட்ட கட்டணத்தை கன்பரா செலுத்தியுள்ளது.
அணுசகதி நீர்மூழ்கிகளைப் பெறுவதற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆஸ்திரேலியா முதலிட வேண்டும்.