உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல ; 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
இதுகுறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இம்முறை (2025) வெளியிட்டுள்ளது.அந்தப் பட்டியலில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்திலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும். ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்து விசா இல்லாமலே 190 நாடுகளுக்குச் செல்லலாம்.
டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகள் அப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த நாட்டின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 189 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.
ஆஸ்திரேலியா 6 ஆவது இடத்தில் உள்ளது. விசா இல்லாமல் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.அமெரிக்கா இப்போது 9-வது இடத்தில் உள்ளது. அதாவது, விசா இல்லாமல் 183 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
ஆப்கானிஸ்தான் 25 நாடுகளுக்கு மட்டுமே செல்லக்கூடிய கடைசி 99-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், சிரியா 98-வது இடத்திலும் (27 நாடுகள்), ஈராக் 97வது இடத்திலும் (30 நாடுகள்) உள்ளது.