தெற்கு சிட்னியில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
40 வயதுடைய ரோசன்னா ஹாஷேம் என்ற என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மேலுமொரு பெண், துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று லிவர்பூல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அங்கு அவர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறியப்படுகின்றது. இப்பெண்கள் மரத்தின்கீழ் அமர்ந்திருந்தவேளையிலேயே இவ்வனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சபா.தயாபரன்