ஆஸ்திரேலியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அணுசக்தி தடை அமுலில் உள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலில் அணுசக்தி விவகாரம் பேசுபொருளாக மாற உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால், ஆஸ்திரேலியா முழுவதும் ஏழு அணுசக்தி உலைகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளது எனக் கூறப்படுகின்றது.
எனினும், இவ்வாறான அணு உலைகளுக்கு கூட்டாட்சி மட்டத்தில் தடை உள்ளது. எனவே, கூட்டணியின் திட்டத்தை செயல்படுத்த வேண்டிவரின் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
1986 இல் ஏற்பட்ட செர்னோபில் பேரழிவுக்கு பிறகு அணுசக்தி குறித்த பொதுமக்களின் கருத்தில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டது.
அந்த மாற்றம் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அணுசக்திக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அணுசக்தி வலையமைப்பை நிறுவுவதற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டணியின் முன்மொழிவுக்கு, நாட்டின் மிகப்பெரிய அணுசக்தி ஆதரவு அமைப்பான ஆஸ்திரேலியாவிற்கான அணுசக்தி ஆதரவை தெரிவித்துள்ளது.
சபா.தயாபரன்